அஸ்வரை அரசியலுக்குள் கொண்டு வந்தது பிரேமதாச இந்நாட்டுக்கு செய்த அழிவில் ஒன்று

ஆளும் கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்­வரை அர­சி­ய­லுக்கு கொண்டு வந்­தமை முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வினால் இந்­நாட்­டுக்கு இழைக்­கப்­பட்ட மற்­று­மொரு அழிவு என வர்­ணித்த ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி. யான சுனில் ஹந்­துன்­நெத்தி அஸ்­வ­ருக்கு பாரா­ளு­மன்ற விவ­கா­ர­மற்ற அமைச்சர் என்ற பத­வியைக் கொடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியில் அமரச் செய்ய வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் செவ்­வாய்க்­கிழமை இடம்­பெற்ற 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தின் தெரி­வுக்­ கு­ழு­வுக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு சுனில் ஹத்­துன்­நெத்தி எம்.பி. உரை­யாற்றிக்கொண்­டி­ருந்தார்.

இதன் போது அஸ்வர் எம்.பி. இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தினார்.

இத­னை­ய­டுத்து அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து நீங்கள் இங்கு இடை­யூ­று­களை விளை­விப்­ப­தற்­குத்தான் சம்­பளம் கொடுத்து உட்­கார வைத்­துள்­ளார்கள். அதனை நீங்கள் மிகச் சரி­யாக செய்­கி­றீர்கள். அஸ்வர் எம்.பி.யின் இடை­யூறு தொட­ரவே அஸ்வர் எம்.பி.க்கு பாரா­ளு­மன்ற விவ­கா­ர­மற்ற அமைச்சர் பதவி ஒன்றைக் கொடுத்து அவர் பாரா­ளு­மன்­றத்தின் பக்கம் வராத வகையில் பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியில் ஒரு அறையை ஏற்­பாடு செய்து அமரச் செய்­ய வேண்டும்.

அத்­துடன் திய­வன்னா ஓயாவைக் கடந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு வர முடி­யா­த­வாறு தடை விதிக்­கப்­பட வேண்டும்.

இதன்­போது எழுந்த அஸ்வர் எம்.பி. நான் பாரா­ளு­மன்ற விவ­கா­ர­மற்ற அமைச்சர் அல்ல. உள்ளூர் துப்­பாக்­கி­களை அழிக்கும் அமைச்சர் எனக் கூறினார்.

இதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரணசிங்க பிரேமதாச இந்நாட்டுக்கு இழைத்த அழிவுகளில் ஒன்றுதான் அஸ்வர் எம்.பி. யை அரசியலுக்குள் கொண்டு வந்த தாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :