கூடுகிறது முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம்!

னாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் நாளை கூடவுள்ளது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தற்போது வருந்துவதாக அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாளை கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :