ஆசியாவின் ஆச்சரியம் மிக்க ஒரு தலைவன் தான் எமது ஜனாதிபதி- அமைச்சர் அதாவுல்லா

எம்.ஜெ.எம்.சஜீத்-
திமேதக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகளை மறந்து சகல  மக்களுக்கும் சேவையாற்றுகின்ற ஆசியாவின் ஆச்சரியம் மிக்க ஒரு தலைவன் என தேசிய காங்கிரஸின் தேசிய  தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். 

சமூர்த்தி அதிகார சபையில் கடமையாற்றும் ஊழியர்களை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக  தரமுயர்த்தி 74 உத்தியோகத்தர்களுக்கு நியமணம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர்  ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு  உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பல வருடங்களாக அதிகார சபையில் பணியாற்றிவருகின்ற இவர்கள் ஓய்வூதியம் இன்றியே ஊழியம்  செய்தனர். ஆனால் தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையிலான அரசாங்கம் சமூர்த்தி  அதிகார சபை ஊழியர்களின் நண்மை கருதி ஓய்வூதியம் பெறக் கூடிய அரச உத்தியோகத்தர்காள அவர்கள் தரம்  உயர்தப்பட்டிருக்கின்றனர். 

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சமூர்த்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களாக கடமை  புரியும் இவர்களை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்காளக தரமுயர்த்துவதற்கு முன்வைத்த மசோதா கிழக்கு  மாகாண சபiயின் வாக்கெடுப்பிற்கு வந்த போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்  பின்வாங்கி மசோதாவினை தோற்கடிப்பதற்கு தமது தலைமை வெளிநாட்டில் இருப்பதாகவும் தமக்கு தற்போது  முடிவெடுக்க முடியாதுள்ளதாகவும் என பல்வேறுபட்ட காரணங்களை கூறி காலங் கடத்தினர் இருந்தாலும் ஆளும் ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னனியும், அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸூம் இவ் மசோதா வெற்றிபெற உழைத்தனர் என்பதை அனைத்து உத்தியோகத்தர்களும் அறிவீர்கள் என தெரிவித்தார். 
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம். ஜஃபர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். நௌசாட் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், அரச திணைக்களத் தலைவவர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :