கடந்த 29-10-2014 அன்று பொல்கஹவெலவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்ற நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர் நேற்று 09-11-2014 அதிகாலை 5 மணி அளவில் காலமானார்.
இவர் தம் குடும்ப சகிதம் கல்லெளிய அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் தம் மகளைப் பார்வையிடுவதற்காக கடந்த 29-10-2014 அன்று சிறு படி வேனில் விஜயம் செய்தார். அதன் போது பொல்கஹவெல என்ற இடத்தில் தனியார் போக்குவரத்து பஸ்ஸும் அவர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு பெண் பிள்ளைகளுடைய தந்தையான இவர் கெக்கிராவை ஊத்துப்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இந்த விபத்தின் போது இவருடன் பயணம் செய்த மனைவி , சாரதி மற்றும் சிறுப்பிள்ளை ஆகியவர்கள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment