புதிய அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன

ரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை சரிசெய்யும் பொருட்டு அவசர அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்படப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதான அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தவகையில், ஜனாதிபதியிடம் கைவசமுள்ள அமைச்சுக்கள், ஹெல உறுமயவினால் வகிக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் எதிர்க் கட்சிக்குச் செல்லவுள்ள அமைச்சர்களின் அமைச்சுக்கள் என்பன இவ்வாறு ஸ்ரீ.ல.சு.கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இன்றைய சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :