பழுலுல்லாஹ் பர்ஹான்
ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 20 வியாழக்கிழமை கையொப்பமிட்டதையெடுத்து மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பட்டாசு கொளுத்தப்பட்டது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நகர சபை ஊழியர்கள் ,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் உட்பட அதில் பங்கேற்ற நகர சபை ஊழியர்கள் மற்றும் இளைஞர்களினால் எங்கள் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கே எனும் கோஷம் எழுப்பப்பட்டது.
மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் பட்டாசு கொளுத்தப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment