பைஷல் இஸ்மாயில்,சியாத் எம் இஸ்மாயில்-
திவிநெகும பயனாளிகளின் வீடுகளை திருத்துவதற்கு 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்குதலும் வாழ்வாதார அபிவிருத்திக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் புதன்கிழமை(19) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் உதவிபிரதேச செயலாளர் றி.ஜெ.அதிசெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 1300 குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்காக 2500 பெறுமதியான பணத்தினை வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment