மருதமுனையில் ஹரீஸ் MP யின் அபிவிருத்திப்பெருவிழா...

எஸ்.எம்.அறூஸ்-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முன்னடுப்பில் மருதமுனையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பெருவிழா நிகழ்வுகள் எதிர்வரும் 10ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

மருதமுனைப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதுடன், முடிவுறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் திறந்தும் வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் கே.ஏ.தௌபீக் தெரிவித்துள்ளார்.

மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வு பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :