அட்டாளைச்சேனை, கோணாவத்தை முகத்துவாரம் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் . அத்துடன், மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டு அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை றஹ்மானியாபாத் 7 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.எச்.அஸ்மிர் என்ற 17 வயது சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
முகத்துவாரம் பகுதிக்கு தனது நண்பர்களுடன் இன்று (07) காலை குளிக்கச் சென்ற மேற்படி நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளதுடன் மூழ்கிய இவர்களில் ஒருவரை மீனவர்கள் மீட்டு அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட இடத்தில் இதற்க்கு முன்னரும் இது போன்று பல இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment