ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை, மதியம் 2.30 மணிக்குத் தொடரும்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதியம் 2.30 மணிக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


குற்றம்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் தலா நான்காண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதா தவிர்த்த பிறருக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருந்ததால், இவர்களது மனுக்கள் கடந்த வாரம் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அவர் இதனை வழக்கமாக விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையடுத்து, தசரா விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்ததும் செவ்வாய்க்கிழமையன்று, 73வது வழக்காக நீதிபதி சந்திரசேகர ராவ் முன்பாக விசாரணைக்குவந்த்து.

அரசுத் தரப்பின் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய பவானி சிங்கே மீண்டும் ஆஜரானார்.

ஜெயலலிதா சார்பாக ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ஜெத்மலானி, “ஜெயலலிதா சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர். நீதிமன்றம் அழைக்கும்போது அவர் ஆஜராகத் தவறியதில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிய பெரும் கால தாமதம் ஏற்படும். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென” வாதிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் ஜெத்மலானி வாதிட்டார். அதற்குப் பிறகு சசிகலா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதிட்டார். ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார்.

மதியம் வந்ததும் வழக்கு மீண்டும் இரண்டரை மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :