வட்டமடு பிரதேச விவசாய காணிகள் மீதான வழக்கில் விவசாயிகளுக்கு சார்பான தீர்ப்பு கடந்த 1968 / 1969 களிலிருந்து அக்கரைப்பற்று விவசாயிகளால் விவசாயம் செய்யப்பட்டு வந்த, வட்டமடு – வேப்பையடி – கொக்குளுவ - வட்டமடு புதுக்கண்டம் மற்றும் முறானவட்டி கண்டம் போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள 1722 ஏக்கர் விவசாய காணிகளை, மேச்சல்தரை என்ற போர்வையில் அபகரிக்க தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததை, அனைவரும் அறிவர்.அக்காணிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக அம்மக்கள்தங்களுடைய உயிர்களையே தியாகம்செய்தனர்.
அந்தவகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு 9 ஆம் மாதத்திலிருந்து, மேற்படி காணிகளுக்குள் விவசாயம் செய்ய முடியாத படி,பல கோணங்களில் மிகத்தீவிர முயற்சிகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரமிருந்தும் அவற்றைத் தடுப்பதற்கு அக்கறையில்லாமல் இருந்தது.
அதற்குப் பிறகு மாகாண சபை உறுப்பினர் தவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமுடன் பேசி கடந்த மூன்று போகங்கள் விவசாயம் செய்ய அனுமதி பெற்றுக் கொடுத்தார். தற்போது அவ்விவசாய நிலங்களை, வனப்பகுதியிலிருந்து வேறுபடுத்தி, எல்லைக்கல்போட்டு அடையாளமிட அனுமதியும்பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விவசாயிகள் விவசாய வேலைகளைச் செய்ய இக்காணிக்களுக்குச் சென்ற போது,பண்ணை வளர்ப்பாளர்களினால் தடுக்கப்பட்டனர். இவ்விடயமறிந்து கடந்த 25. 10. 2014 ஆம் திகதி சட்டத்தரணிகளான ரகீப், சமீம் மற்றும் உவைசுர் ரஹ்மான் ஆகியோர் சகிதம் ஸ்தலத்திற்கு சென்று சமாதானமான முறையில் தீர்வுகாண முயற்சித்தும்முடியாமல்போகவே, நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்துமாறு
பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அதன் பிரகாரம், 27.10.2014 ஆம் திகதி, பொத்துவில் நீதிமன்றில் நடைபெற்ற அவ்வழக்கில், விவசாயிகளின் நியாயத்தையும், அவர்களிடமுள்ள ஆவணங்களையும் பரீசீலித்த நீதிமன்றம், விவசாயிகளை தடுத்து சமாதானக் குலைவை ஏற்படுத்திய பண்ணையாளர்களை எச்சரித்ததோடு, அவர்களின் உடமைகளை விவசாய காணிகளிலிருந்து அப்புறப்படுத்தி விவசாயம் செய்ய இடமளிக்க உத்தரவிட்டுள்ளது.
சுமார் முப்பது வருடமாக தங்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்க, பல வழிகளிலும் உதவிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப்ஹக்கீம் அவர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோருக்கும், சட்டத்தரணிகளான ரகீப், உவைசுர் ரஹ்மான், முனாஸ், சமீம் என்பவர்களுக்கும், இவ்விவசாயிகள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
.jpg)
0 comments :
Post a Comment