சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இப்பிரதேசத்தின் பாடசாலைகளுக்கு விஜயம் செய்த அமைச்சர், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வகுப்பறைக் கட்டிட நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகளையும் நேரடியாக சந்தித்து பாடசாலையிலுள்ள குறைபாடுகளை கேட்டறிந்தனர்.
அதுமட்டுமல்ல பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிட பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இப்பிரதேச பாடசாலைகள் எதிர்நோக்கிவரும் வளப்பற்றாக்குறை மற்றும்; ஏனைய தேவைகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் அஸ்-ஸாஹிறா வித்தியாலயம், இக்ரஹ் வித்தியாலயம், மத்திய கல்லூரி, ரி.பி. ஜாயா வித்தியாலயம், அல் முனிறா பெண்கள் உயர் பாடசாலை, அல் அர்ஹம் வித்தியாலயம், அறபா வித்தியாலயமும் பாலமுனையில் மின்ஹாஜ் மகா வித்தியாலயம், அல் ஹிதாயா வித்தியாலயமும் ஒலுவிலில் அல் ஜாயிஸ்ஸா வித்தியாலயம், தாறுல் உலும் வித்தியாலயம், அல் அஸ்ஹர் வித்தியாலயம், அல் ஹம்றா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு முழு நாளாக தனது விஜயங்களை சிறப்பாக மேற் கொண்டார்.
இறுதியாக அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி அவர்களின் காரியாலயத்தினை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சருடன் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம், அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, பாடசாலை கட்டிட பொறியியலாளர், திட்டமிடல் பிரவு உதவிக் கல்விப் பணிப்பாளர் அஸ்வர், அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் அதிபருமான ஏ.சி.சைபுத்தீன், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர் போன்றோர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment