இலக்கிய இதயங்களை கலகலப்பாக்கிய வலம்புரி கவிதா வட்டத்தின் பத்தாவது கவியரங்கு

 லம்புரி கவிதா வட்டத்தின் பத்தாவது கவியரங்கு கடந்த புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று  கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10 மணிக்கு கவிஞர் கலைவாதி  கலீல் தலைமையில் மிகவும் சுவாரஷியமாக நடைபெற்றது.

நிகழ்வினை வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார். நிகழ்வில் பிரதம அதிதியாக மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி  ராஜதுரை கலந்து கருத்துரை வழங்கினார். வகவத்தின் ஆரம்ப காலத்திலும்கூட தான் அதிதியாக  பங்குபற்றியிருப்பதை ஞாபகப்படுத்தியதோடு வாசிக்கப்பட்ட கவிதைகளையும் சிலாகித்துப்  பேசினார்.

'பலதரப்பட்ட கவிதைகள் இங்கே வாசிக்கப்பட்டன. கவிதா ஆளுமைகளைக் கண்டு நான் அகமிக  மகிழ்கிறேன். ஓவ்வொரு மனிதனிலும் ஒரு கவிஞன் இருக்கிறான். அவனை வெளிக்கொண்டு  வருவதில் வகவத்தின் பங்கு மகத்தானது. இவ்வாறான தமிழ்ப்பணி தொடர்ந்து நடைபெறவேண்டும்' என தனது கருத்துரையில் தெரிவித்தார்.

வரவேற்புரை வழங்கிய மேமன்கவி திருமதி அன்னலட்சுமி ராஜதுரை பற்றி குறிப்பிடுகையில்  அவரது எழுத்தின் ஆளுமையைப் பற்றி விதந்துரைத்தார். 'திருமதி அன்னலட்சுமி ராஜதுரை  அவர்கள் ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த இலக்கியவாதியுமாவார். அவரது நூல்கள்  வாசகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு சிறப்பான நடையை தன்னிடத்திலே வைத்திருக்கும்;' என்றார்.

கவியரங்கில் கவிஞர்களான மட்டக்களப்பு லோகநாதன், வாழைத்தோட்டம் எம். வஸீர், பிரேம்ராஜ், கவிக்கமல் ரஸீம், வெளிமடை ஜஹாங்கீர், வதிரி. சீ. ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, புத்தளம் கலாபூசணம் அப்துல் லத்தீப், யாழ் அஸீம், சமூகஜோதி ரபீக், சுஹைதா ஏ.கரீம், மொரட்டுவ மஸீதா அன்ஸார், எஸ்ஏ.கரீம், ஈழகணேஷ் ஆகியோர் வித்தியாசமான கவிதைகள் பாடி சபையோரின் பாராட்டைப் பெற்றனர்.

வகவத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், தற்போதைய வகவ வளர்ச்சியில் அயராது உழைத்து வருபவருமான காத்திபுல் ஹக் எஸ்.ஐ.நாகூர் கனி திடீர் சுகயீனமுற்று வைத்திய சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டதோடு அவர் மீண்டும் பரிபூரண சுகம் பெற பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பிரபல பத்திரிகையாளர் கே.விஜயன், கலாபூசணம் தாசிம் அகமது, தமிழ்த்தென்றல் அலி அக்பர், எம்.எஸ்.எம்.ஜின்னா போன்றோர் சபையை அலங்கரித்தனர்பதினோராவது வகவ கவியரங்கின் தலைவராக கவிஞர் பிரேம்ராஜ் அறிவிக்கப்பட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :