.jpg)
பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 458 குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 13-10-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து நிவாரன உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸ்ஸூஹ்ரி உள்ளிட்ட அதிதிகளினால் 458 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரன உதவித் தொகைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,பிரதேச செயலக கணக்காளர் கே.கருணாகரன், ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் காத்தான்குடி பிரதேச செயலக இணைப்பாளர் மனாசிர் அஹ்சான் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வெள்ள அனர்த்தத்தினால் முழு அளவில் பாதிக்கப்பட்ட 79 குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதமும் பகுதி அளவில் சேதமான வீடுகளைக் கொண்ட 379 குடும்பங்களுக்கு தலா ஐம்பது நாயிரம் ரூபாவும் உதவி தொகைகள் வழங்கப்;பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment