த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரையாக்கன்தீவு கிராமத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மக்கள் சந்திப்பின் பொருட்டு திங்கட்கிழமை விஜயம் செய்தார்.
இந்நிகழ்வின் போது கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர் பாரதிதாசன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இணைப்பாளர் சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள், பேரவையின் அலுவலகர் கி.சஜீவன், பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கிராம மக்கள் பலர் தமது கிராமத்தின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர். குறிப்பாக இன்றுவரை முடிக்கப்படாத மீனவர் சங்க கட்டடம் முற்றாக நிறைவேற்றப்படுவதற்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 90 வீதம் மீனவர்களைக் கொண்ட தங்கள் கிராம மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படாமை. இன்றுவரை வீடு இல்லாத நிலையில் மிகுந்த கஷ்ர நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு இந்திய வீடு உட்பட எதுவித வீடுகள் வழங்கப்படாமை.
இக்கிராம இளைஞர்கள் கால்பந்தாட்ட போட்டியில் மிகவும் திறமை மிக்கவர்கள். அதனால் இவர்கள் யுத்த காலத்துக்கு முன்பெற்ற நூற்றுக்கணக்கான வெற்றிக் கேடயங்கள் இராணுவத்தால் உடைக்கப்பட்டதாகவும், அதன் பின் இளைஞர் கழகம் மூலமும், விளையாட்டுக் கழகம் மூலம் பெற்ற இவ் உபகரணங்களை பாதுகாக்க இடமின்றி இருப்பதையும் எடுத்துக் கூறினர். நூற்றுக்கணக்கான வெற்றிக் கிண்ணங்களை பாராளுமன்ற உறுப்பினருக்கு காட்டினர்.
அத்தோடு கணவனை இழந்த விதவைகள், யுத்தத்தால் அங்கவீனரானவர்கள் போன்றோரின் சுயதொழிலுக்கு உதவுமாறும் வேண்டுதல் விடுத்தமை மற்றும் தமது பாடசாலை வீதி திருத்தப்படாமல் உள்ளதால் இது சார்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர்.
குறிப்பாக தாங்கள் குடி நீரால் மிகுந்த கஷ்ரத்தை கோடை காலத்தில் அனுபவிப்பதாகவும், குளத்துக்குள் கட்டியுள்ள ஒரு கிணறு கூட மிகவும் அழுக்காக தண்ணீரை கொண்டுள்ளதாகவும், எனவே உன்னிச்சை தண்ணியை குழாய் மூலம் தங்களுக்கும் பெற்றுத் தருமாறு வேண்டுதல் விடுத்தனர்.
வேலையின்றி பல கற்ற இளைஞர் யுவதிகள் உள்ளதால் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு உதவி கோரினர். தங்கள் பகுதி கற்பிணிகள் பரிசோதனைக்காக கன்னங்குடா செல்ல வேண்டியுள்ளதால் மிகுந்த கஷ்ரத்தை அனுபவிப்பதனால் தங்கள் கிராமத்துக்கு வந்து கற்பினிமாருக்கான பணியை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு கூறியதுடன், மரண வீடுகளில் பிரயோகிப்பதற்காக கதிரை உதவி, பாலர் பாடசாலைகளுக்கன உதவி, விவசாய நடவடிக்கைகளுக்கான உதவி உட்பட பல விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
சகல விடயங்களையும் அவதானமாக கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற பதில்களை வழங்கி வைத்ததுடன், இயன்றவரை உதவுவதாக தெரிவித்தார். இந்நிகழ்வானது அக்கிராமத்தை சேர்ந்த பெரியார் ந.ரவிச்சங்கர் தலைமையில் நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment