த.நவோஜ்-
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் என்பவற்றில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.
ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் 'சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஊர்வலம் நடாத்தியதுடன், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் மாணவர்களுக்கிடையில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடாத்தியது.
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த ஊர்வலம் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி வை.எம்.எம்.ஏ.வீதி, ஆலிம் வீதி, வாழைச்சேனை பிரதான வீதி, முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி வழியாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இரண்டு பாடசாலைகளின் நிகழ்வுகள் பாடசாலைகளின் அதிபர்களான எம்.ரீ.எம்.பரீட், எம்.யூ.இஸ்மாயில் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றதோடு, இந்நிகழ்வில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாஹிப் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment