கொமர்ஷியல் கிரெடிட் பினான்ஸ் நிறுவனத்தின் 32வது ஆண்டு நிறைவு

த.நவோஜ்-

கொமர்ஷியல் கிரெடிட் பினான்ஸ் (Commercial Credit Finance PLC) நிறுவனத்தின் 32வது ஆண்டு நிறைவும், மட்டக்களப்பு கிளையின் 4வது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் சனிக்கிழமை மட்டக்களப்பு கிளையில் நடைபெற்றது.

கிளை முகாமையாளர்களான ஏ.கிஷாந், என்.மயூரதன் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வடகிழக்கு பிராந்திய சிரேஷ்ர செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.திருக்குமரன், சிறப்பு அதிதிகளாக கிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகாந்தன், வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் பி.ரொகான், மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர்களும், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விஷேட வைபவத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் கொமர்ஷியல் கிரெடிட் பினான்ஸ் (ஊழஅஅநசஉயைட ஊசநனவை குiயெnஉந Pடுஊ) நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் 30ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களின் இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :