தியாகத் திருநாளில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பிராத்திப்போமாக- பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

கை திருநாளாம் ஹஜ் பெருநாளில் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் உலவிற்கு காட்டித்தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக கடைப்பிடிக்க முஸ்லிம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் ஹிறா பவுண்டேசன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது :- வல்ல நாயன் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிட இப்றாஹிம் நபிகள் (அலை) அவர்கள் பெரும் தியாகத்தை செய்து முழு உலகிற்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள் இந்த வேளையில் முழு உலகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது இந்த சோதனைகளில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிட்டுவதற்கு இந்த நன்நாளில் நமது வழிபாடுகளில் பிரார்த்தனைகளில் ஈடுபாடு காட்ட எம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.

புனித இஸ்லாம் தெளிவாக காட்டியுள்ளது. அனைத்து மக்களுடன் இன மத வேறுபாடுகளின்றிசகோதர வாஞ்சையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறது. இதற்கமைய அனைத்து சமூகங்களுடனும் சகோதரத்துடன் வாழ்ந்து எம் சமூகத்தின் உயர்வுக்காக பாடுபட இந்த நன்நாளில் முன்வரவேண்டும்.

இந்த வகையில் எம்மிடையே எவ்வித சோதனைகள் வந்தாலும் சமூகத்தின் நலன்களை பாதிக்காத தூரநோக்குள்ள தீர்மானங்களேயே நாம் எடுக்க வேண்டும் எழுந்த மானத்தில் எடுக்கபடும் முடிவுகளும் உணர்ச்சியான கருத்துக்களும் மாத்திரம் எம் சமூகத்தின் முழு நலனையும் வென்றுவிட முடியாது என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பொறுமையை கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுடனான நல்லுறவுகளை கட்டிக்காத்து நம் நமூகத்தின் தேவைகளை புத்திசாதுரியமாக அடைந்து கொள்ள இந்த நன்நாளில் உறுதி பூணுவோமாக இந்த தியாக திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சசோகதரர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த திருநாள் நம் அனைவரினதும் சந்தோச வாழ்விற்கு இட்டுச்செல்ல வேண்டும் என வல்ல நாயனை பிராத்;திக்கின்றேன் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :