மண்சரிவினால் புதைந்த உறவுகளுக்கு கொழும்பில் மெழுகு சுடர் ஏந்தி பிராத்தனை- படங்கள்

 அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பு ஜந்து லாம்புச் சந்தியில் செட்டியார் தெருவில் உள்ள சகல கடைகளும் இன்று  வெள்ளிக்கிழமை 2மணிமுதல் 03 மணிவரை மூடி மெழுகுவர்த்திகளை சுடர் ஏந்தி தொலைந்து  போன உறவுகளுக்கு துயர் பகிர்ந்து அவர்களுக்காக புறக்கோட்டை மூவினங்களையும் சார்ந்த  வியாபாரிகள், தொழிலாளர்கள் ஒன்று கூடி பிராத்தனையில் ஈடுபட்டனர்.

பதுளை கொஸ்லாந்தை, மீரியாபெத்தையில் இயற்கையின் சீற்றத்தினால் மண்ணில்  உயிருடன் புதைந்து போன எம்மக்களினதும், பாதிப்புக்குள்ளான எமது மக்கள் விரைவில் சுமுக  நிலையினை அடையவும், இயற்கையின் கோர தாண்டவத்தினால் அகால மரணமடைந்து எமது அன்பு  உடன்பிறப்புகளின் ஆத்மா சாந்தியடைய பிராhத்தனை செய்தனர். இந் நிகழ்வை மலையக கல்வி  அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நகை வியாபாரிகள், புடவை வியாபாரிகள், அகல இலங்கை இரும்பு வியாபாரிகள்,  அகில இலங்கை இந்து மன்றம், புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பனி மன்றம், பழைய சோனகத்  தெரு வர்த்தக சங்கம், நான்காம் குருக்குத தெரு வர்த்தகர்கள் சார்பாக புரவலர் ஹாசீம் உமர்  ஆகியோறும் கலந்து மெழுகுவர்த்தி ஏந்தி பிராத்தனையில ஈடுபட்டனர்.

இங்கு பல்வேறு பிரதிநிதிகள் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதி மண்சரிவினால் பாதிக்கப்படும் என தெரிந்திருந்தும அரசாங்க அதிகாரிகள்  உரிய வேற்றுக் காணிகளை வழங்கி வீடுகளை நிர்மாணிக்கவில்லை.

ஆரசாங்கம் கொத்தலைத் நீர்த்தேக்க அபிவிருத்திகளையே கரிசனை காட்டுகின்றது. பரம்பரை  பரம்பரையாக 200 வருடகாலமாக தோட்ட மக்கள் லயன் அரைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். 

ஆரச காணி வழங்கி தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்க வில்லை வுhக்கு அளிக்குமாறு மட்டுமே அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் தேர்தல் வெற்றி பெற்று  மறந்து விடுகின்றார்கள்.

75 குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.  இந்தியா, அமேரிக்காவின் உதவி அளிக்க காத்திருக்கின்றன. ஆனால இலங்கை  அரசாங்கம் முன்கூட்டியே இந்த மக்களது வாழ்வாதாரத்திற்கும் இயற்கை அனர்த்தகளில்இருந்து  பாதுகாப்பான இடங்களில் குடியேற்றியிருக்கலாம் . ஏன பலர் அங்கு கருத்து தெரிவித்த்னர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :