ஜுனைட் நளீமியினால் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இலவச கொப்பிகள் கையளிப்பு

 மாஞ்சோலை வைத்தியசாலையின் கிளினிக் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளிகளின் சிரமம் கருதி  அவர்களுக்கான சிகிச்சைக்குறிப்பு பதிவேடுகளை முறையாக பேணுவதற்கான அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக  விநியோகிப்பதற்கான முயற்சியினை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எம். எம். முஸ்தபா  மேற்கொண்டுள்ளார். இந்தவகையில் குறித்த தேவை குறித்து ஜுனைட் நளீமியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய   நளீமியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக 1000 அப்பியாசப்புத்தகங்க்களை  வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிறைவேற்றதிகாரி தேசமான்ய மங்கள சீ செனரத் அவர்களினால் ஜுனைட்  நளீமியிடம் கையளிக்கப்பட்டது. இதனை வைத்தியசாலை அதிகாரி எம். எம். முஸ்தபா அவர்களிடம் இன்று 

கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஆலையின் முகாமையாளர் நளின் கருணாரத்ன, சதீக் ஆசிரியர்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :