காத்தான்குடியில் ஹஜ் தினத்தை முன்னிட்டு ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

1990ஆம் ஆண்டு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயல்களில்; 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 05-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன் போது பள்ளிவாயல் தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் பிரதிநிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்வி அந் நிறுவனத்தின் செயலாளர் எம்.ஐ.நாஸர் அதன் பொருளாளர் முஹம்மட் றுஸ்வின் மற்றும் காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :