காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் அடிக்கல் நடும் வைபவம்



எம்.ஐ.பிர்னாஸ்-

காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இதற்கான அடிக்கல் நடும் வைபவம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்.காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு இவ் வேலைத்திட்டங்களை ஆரம்பம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி சுதர்ஷினி சிறிகாந்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெஃபர்,சமூர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்எம்.அம்சார்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக இணைப்பாளர் தேசகீர்த்தி எம்.ஐ.றியாஸ் உட்பட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் எட்டு இலட்சம் ரூபா முன்மொழிவின் பிரகாரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இவ் வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :