ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் ( Srilanka institute of information Technology) நடாத்தும் கோட்பெஸ்ட் ( codefest) Fun learning Game போட்டியில் தேசிய மட்டத்தில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி உயர்தர தொழில்நுட்பப்பிரிவு மாணவர்கள் மூவர் பெற்றுள்ளனர்.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 100 பாடசாலைகள் பங்கேற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 15 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இரண்டாவது சுற்றின் போது 7பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை ( 24 ) மாலபே கெம்பஸில் தேசிய இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.
சிறுவர்களுக்கு ஆங்கில் எழுத்துக்களை இலகுவான முறையில் உச்சரிக்கக்கூடிய விதம் பற்றிய A to Z வரையிலான learning aid இனை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளனர். தொழில்நுட்பத்துறையில் மிகவும் உயர்ந்த தரத்தில் இச் செயற்பாட்டினை கல்லூரியின் தொழில்நுட்பவியல்துறை ஆசிரியர் எம்.ஐ.எம்.பஸீலின் வழிகாட்டலில் உயர்தர தொழில்நுட்பத்துறையில் முதன்முதலில் காலடிவைக்கவுள்ள இறுதி வருட மாணவர்களான கே.எம்.எம்.அஸாம் ஹுசைன் , எல்.ஹனீப் மொஹமட் , எம்.ஜே.எம்.முதஸ்ஸிர் ஆகியோர் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வருடம் இலங்கையில் முதன்முதலில் உயர்தர வகுப்புகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப பாடநெறி கல்முனைத் தொகுதியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் மட்டுமே உள்ளது. இதனால் இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மாணவர்களுடன் தமிழ் மாணவர்களும் இத்துறையில் ஒரு வகுப்பில் இணைந்துள்ளதனால் இன ஒற்றுமைக்கும் இது வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கல்லூரியின் புகழை தேசிய மட்டும் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதில் பெரும் பங்காற்றிவரும் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.பஸீல் உள்ளிட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பழையமாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக் , பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவர் டாக்டர் சனூஸ் காரியப்பர் , கல்லூரி முகாமைத்துவ ஆசிரியர் குழு என்பன பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இறுதிப் போட்டிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி , கொழும்பு தேஸ்டன் கல்லூரி , பிலியந்தல மத்திய கல்லூரி , கல்கிசை புனித தோமஸ் கல்லூரி , அளவ்வ ஸ்ரீ ராகுல வித்தியாலயம் , பண்டாரவல மத்திய மகா வித்தியாலயம் , மாத்தறை தெலிச்சாவல மத்திய கல்லூரி ,ஆகிய 7 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தேசிய மட்டத்தில் வெற்றி பெற அனைவரும் பிராத்திப்போமாக.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ” ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம்” ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தேசிய மட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை தோற்கடித்ததன் மூலம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment