த.நவோஜ்-
கல்குடா அல்- கிம்மா நிறுவனத்தினால் வாழைச்சேனை ஹைராத் வீதியில் வசிக்கும் ஹைறுன் நிஸா என்பவருக்கு சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றினை அமைத்து புதன்கிழமை பயனாளியிடம் ஒப்படைத்தனர்.
குறித்த வீட்டினை முழுமையாகப் பூர்த்தி செய்து புதன்கிழமை அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) பணிப்புரைக்கமைய பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிரினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது நிறுவனத்தின் உத்தியோகஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கல்குடாப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல்- கிம்மா நிறுவனம் நாட்டின் பலபாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்து வருகின்றது. அதன்தொடரில் வீட்டு மின்னிணைப்பு, குடிநீர் வசதி, மற்றும் சுயதொழில் வழிகாட்டல், பட்டப்படிப்பிற்கான புலமைப்பரிசில் நிதி வழங்கல், இலவச வைத்தியமுகாம் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வரும் அந்நிறுவனம் குடியிருப்பு வசதியற்ற வறிய குடும்பங்களை இனங்கண்டு சிறுவீடுகளையும் அமைத்துக் கொடுத்து வருகின்றது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment