பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான் -
கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகளில் 40 புள்ளிகளுக்கு குறைந்த மாணவர்களின் அடைவுமட்டத்தினை விருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் வழிகாட்டல் கருத்தரங்குகள் நடை பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் பொத்துவில் உப வலய பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று 2014.10.23 பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் நடை பெற்றது.
இந்நிகழ்வானது அக்கரைப்பற்று வலயத்திற்கான தமிழ் மொழிப்பணிப்பாளர் எம்.ஜ.எம்.ஹனிபா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக கலாநிதி எஸ்.சிவநிர்த்தானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
ஆரம்ப விழாவில் கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழிப்பிரிவு இணைப்பாளர் கே. விக்னராஜா யாழ் மகஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் கே. வேல் சிவானந்தன் ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. சபூர்தீன் மற்றும் கல்லூரியின் அதிபர் ஏ.எல் கமறுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment