த.நவோஜ்-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மருத்துவப் பிரிவை நவீன வசதிகளுடன் கூடிய கணனி வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
ஹற்ச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் ஒரு மில்லியன் செலவில் நிறுவப்பட்ட கணனியின் வலையமைப்பை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி கிறேஸ் நவரட்ணராஜா, ஹற்ச்; நிறுவகத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவி ரம்சீனா லே மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் கலாநிதி கே.கருணாகரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
முதலாவதாக யாழ்ப்பாணத்;திலும், இரண்டாவதாக மட்டக்களப்பிலும் அடுத்ததாக திருகோணமலை வைத்தியசாலையில் வலையமைப்பை நிறுவவுள்ளதாக சத்தியம் பிரைவேட் லிமிட்டெட்டின் பணிப்பாளர் அலன் சத்தியதாஸ் தெரிவித்தார்.
இதன்போது சிறுவர்களின் பதிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கோவைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொம்மைகள் வழங்கப்பட்டன.
குழந்தைகள் நலன்காப்பு வைத்திய நிபுணர் அஞ்சலா அருள்பிரகாசம், சிரேஷ்ட வைத்திய அதிகாரி எஸ்.அன்புதாசன், பிராந்திய விற்பனைத் தலைவர் நெலுபெர்ணாண்டோ உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment