பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டில் அதிபர்களின் வகிபங்கு அளப்பெரியது என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் கல்முனைக் கல்வி வலய மேற்பார்வை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இன்று(25) பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்ற கல்முனைக் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர்களினுடனான சந்திப்பின்போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்கவினால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகள், விளையாட்டு மட்டும் பரிசளிப்பு விழாக்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகள், பாடவிதானங்களிலுள்ள குறைபாடுகள், மாணவர்களின் ஆளுமை விருத்திச் செயற்பாடுகள் போன்றவற்றில் அதிபர்களாகிய உங்களுடன் இணைந்து எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களைச் சரியாகச் செயற்படுத்தி இக்கல்வி வலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் உதவுவதாகும்.
மாறாக, உங்களுடைள கடமைகளில் தடங்களை ஏற்படுத்தவோ அல்லது உங்களது பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடவோ எனது நியமனம் அமையாது எனக்; கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதாக அறிவதோடு. குறைந்தபட்டம் வருடந்தோரும் ஒரு பரிசளிப்பு விழாவைக் கூட நடத்தாத பல பாடசாலைகளில் இக்கல்வி வலயத்தில் உள்ளதாகவும் நான் அறிக்கின்றேன்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும். கற்றல் செயற்பாடு மட்டும் ஒரு மாணவனை முழு ஆளுமையுள்ளவனாக மாற்றாது.
கற்றல் செயற்பாட்டுடன் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் கலந்துகொள்வது அவசியமாகிறது. அப்போதுதான் வாழ்நாளில் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு மாணவர்களால் முகங்கொடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.
பாடசாலை ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் பாடசாலைகளிலிருந்து சமூகத்திற்கான சிறந்தவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக பாடசாலை அபிவருத்திக்குழுக்கள் உட்பட பாடசாலைச் சமூகத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பும் அப்பாடசாலைக்கு இன்றியாமையாதது. குறிப்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் இணைந்துக்கொள்ளப்படுவது அவசியமாகவுள்ளது.
பாடசாலை ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் பாடசாலைகளிலிருந்து சமூகத்திற்கான சிறந்தவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக பாடசாலை அபிவருத்திக்குழுக்கள் உட்பட பாடசாலைச் சமூகத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பும் அப்பாடசாலைக்கு இன்றியாமையாதது. குறிப்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் இணைந்துக்கொள்ளப்படுவது அவசியமாகவுள்ளது.
மேலும், பாடசாலையின் முகாமைத்துவக் கட்டமைப்பும் செயற்பாடுகளும் முறையாகச் செயற்படுத்தப்படுகின்றபோது அப்பாடசாலை; வளர்ச்சியடைவததைக் காண முடியும். இதில் முக்கிய வகிபங்கு பாடசாலை அதிபர்களைச் சார்ந்ததாக அமையும்.
பாடசாலை அதிர்பகள் தங்களது அளப்பெரிய வகிபங்குகளை சரியாகப் பயன்படுத்தி கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்கு உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கல்முனைக் கல்வி வலய மேற்பார்வை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது கல்விமுனைக் கல்வி வலயக் கல்விப் பணிணபாள் ஜலீல், வலயக கல்விப் பணிமனை அதிகாரிகள் உட்பட கல்முனைக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment