ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அக்கரைப்பற்று போராளியின் திறந்த மடல்....

கௌரவ- அல்ஹாஜ் றஊப் ஹக்கீம்
தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ்
நீதியமைச்சர்
கொழும்பு


ன்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனது நலன்களில் தனிப்பட்ட
வகையில் நீங்கள் காட்டும் அக்கறையில்இ ஒரு தந்தையைப் போன்ற கனிவை நான் கண்டிருக்கிறேன். உங்களுடைய எல்லா விடயங்களிலும் அல்லாஹ் துணை நிற்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். ஆனால் இப்போது உங்களோடு நான் பேச நினைக்கின்ற விடயம் நமது கட்சி பற்றியது. அதிலும் குறிப்பாக அக்கரைப்பற்றில் உள்ள நமது கட்சியின்நிலைமை பற்றியது.

தலைவர்அவர்களே...... 

நான் அக்கரைப்பற்றில் மு கா வின் நீண்டகால போராளி. என்னைப் போன்றே எனது குடும்பத்தில் உள்ளவர்களும் போராளிகள். மு கா வின் அரசியலில் ஈடுபட்டு நாட்டில் இருக்கவே முடியாமல் எனது மூத்த சகோதரன் இன்று வெளிநாடு சென்று வாளுமளவுக்கு நாங்கள் போராளிகள்.

எனவே அக்கரைப்பற்றில் மு கா வின் களநிலவரம் பற்றி உங்களோடு பேசுவதற்கு எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அந்தவகையில் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த காலத்தில் சகோ. உவைஸ் அவர்கள் அமைப்பாளராக இருந்துஇ அவர் விலகிய பின்னர் ஹனிபா மதனி உருட்டிச் சென்ற மு கா அல்ல இப்போது இருப்பது. புதிய தெம்பும் துடிப்பான இரத்தமும் கொண்ட எந்த சவாலுக்கும் முகங்கொடுக்கும் முகா தான் இப்போது அக்கரைப்பற்றில் இருக்கிறது. புத்திஜீவிகள் படித்தவர்கள் அரச உத்தியோகத்தர்கள் இளைஜர்கள் விவசாயிகள் வர்த்தகர்கள் என்று புதிய போராளிகள் நாளாந்தம் கட்சியில் இணைந்து கொண்டிருக்கும் மு கா தான் அக்கரைப்பற்றில்
இன்று இருக்கிறது.

எதையும் சிந்தனைகளால் சந்தித்து அவற்றை வித்தியாசமான
கோணத்தில்அணுகும்மு கா தான் இன்று இருக்கிறது.

தலைவர்அவர்களே......

இந்தப் புதிய பரினாம வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மாகாண

சபை உறுப்பினர் தவம்இ நமது கட்சியில் இணைந்ததற்கு பின்னர்தான் இம்மாற்றம்

இடம்பெற்றுள்ளது என்பது இன்று எல்லோருமே கூறுகின்றனர். அவரை கட்சியில்

இணைப்பதற்கும் தேர்தலில் களமிறக்குவதற்கும் நீங்கள் எடுத்த தீர்மானம்

எவ்வளவு பெறுமதியானது என்பதை இன்று அக்கறைப்பற்று போராளிகள் அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள்.

ஆனாலும் இவ்வாறு அக்கரைப்பற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை எந்தளவு நமது கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. புதிய மாற்றத்தை கட்சிக்குள் உள்வாங்கும் எந்த முயற்சியையும்இதுவரை நாம்காணவுமில்லை. அக்கரைப்பற்றில் இருபத்தி எட்டு கிராம சேவகர் பிரிவுகளும்இ இரண்டு உள்ளூராட்சி மன்றங்களும் உள்ளன. இதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒவ்வொரு அமைப்பாளர் இருப்பினும் இருபத்தி எட்டு பேர் வர வேண்டும். இதற்கு மேலதிகமாக

முக்கியஸ்தர்கள் என்று சிலரும் உள்வாங்கப் பட்டால்இ மொத்தத்தில் முப்பத்தைந்துக்கு மேற்பட்டவர்கள்இருக்க வேண்டும். ஆனால்இ இதுவரை மத்திய குழு கூட்டம் எனக்கூறி கூட்டப்படும் எந்தக் கூட்டத்திற்கும்இ பத்து அல்லது பதினைந்துக்கு உட்பட்டவர்களே சமூகமளிக்கின்றனர்.  மிகுதிப் பேர் தொடர்ச்சியாக கூட்டங்களுக்கு சமூகமளிப்பதே இல்லை. இந்நிலையில்
இக்கட்சியை எப்படிக் கொண்டு செல்ல முடியும் என்பதால் தொடர்ச்சியாக
சமூகமளிக்காதவர்களுக்கு அறிவித்து அவர்களின் சம்மதத்துடன் புதிய கிராம
சேவகர் பிரிவு அமைப்பாளர்களை நியமிப்பது என இரண்டு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நான்அறிந்தேன்.

ஆனாலும்இ வருடங்களும் மாதங்களும் கழிந்தனவே தவிரஇ கட்சியை புனர்நிர்மாணம் செய்வதற்கான  எந்த முயற்சியும்மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டால் அமைப்பாளரே அதனை செய்ய வேண்டும் எனக்கூறி நழுவுவதால்இ அவரும் தவறு விடுவதாகவே என்னால் பார்க்க முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை இவ்வாறு புதியவர்களை உள்வாங்குவதில் காட்டப்படும் தயக்கத்திற்கு காரணம் எங்கே தங்களது இருப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமே என்பதை என்னால்அவதானிக்க முடிகிறது.

தலைவர்அவர்களே......

நான் மு கா வின் ஆரம்ப போராளி என்ற வகையிலும் இந்த கட்சி அக்கரைப்பற்றில் மீண்டும் வேரூண்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கும்வகையில்கட்சி புனரமைக்கப்பட வேண்டும்என
உங்களிடம் வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.

அதே போன்று தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அக்கரைப்பற்றில் இக்கட்சி வழிநடாத்தப் படுவதற்கு நீங்கள்ஆவன செய்ய வேண்டுமெனவும்கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வண்ணம்
எப். அப்துல்குத்தூஸ்
அக்கறைப்பற்று
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :