அன்று அங்கு..?? நேற்று அக்கரைப்பற்று..?? இன்று வெலிகமை..?? நாளை எங்கே..??

ஸ்லாம் சமாதானத்தை போதிக்கின்ற ஒரு மார்க்கம் என்பதில் இஸ்லாம் பற்றிய மாசற்ற அறிவுடையோரிடம் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. எமது செயற்பாடுகள் மாசற்ற அறிவை அன்னியோரிற்கு புகட்ட வித்திடுமா..?என்றால் தற்போது இல்லை என்ற பதிலையே எம் வினாவிற்கான விடையாக பெறலாம் என்றே கூற வேண்டும். அன்று அங்கு? நேற்று அக்கரைப்பற்றில்..? இன்று வெலிகமையில்..?நாளை எங்கே? என்றளவு இஸ்லாமிய கொள்கை வேறு பாட்டு இயக்கச் சண்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சமாதானத்தை போதிக்கும் மார்க்கத்தில் இருந்து கொண்டே சண்டை பிடித்து மண்டை உடைக்கிறோம். இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிக்க கங்கனம் கட்டி அலையும் எதிரிகள் எம்மைப் பார்த்து நையப்புடைகிறார்கள்இஎம்மில் நுழைந்து எம்மைத் தாக்க அழகிய வழியைக் காட்டிக் கொடுத்துள்ளீர்கள்.இதற்குத் தான் நீங்கள் ஆசைப்பட்டீர்களா? ஹஜ் முகவர்கள் பொது பல செனாவிடம் சென்றது போன்று எம் இஸ்லாமிய இயக்கத்தினர் சிலர் மற்ற இயக்கத்தினரை அழிக்க பொது பல சேனாவுடன் கை கோர்த்து எதிர் காலத்தில் பயணிக்க முனைப்புக் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்தளவு எமது இயக்கச் சண்டைகள் உள்ளன.

ஏன் நாம் சண்டை போட வேண்டும்..??சண்டை போடுபவர்கள் யார்..??என்றால் உண்மையில் இஸ்லாத்தை மாசற அறியாதவர்கள் என்பதில் எது வித ஐயமுமில்லை.மக்களே!இவ்வாறு சண்டை இடுபவர்கள் யாராக இருந்தாலும் முதலில் அவர்களை நிராகரியுங்கள்.

சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடந்த ஒரு முறுகலையும் இவ் விடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.
சம்மாந்துறையில் அப்துல் மஜீத் இற்கு வெளியே 2014.02.09 ம் திகதி சம்மாந்துறை தாருஸ் சுன்னா கிளையினால் ஒரு பிரச்சாரம் நடாத்தப பட்டது.இப் பிரச்சாரத்தின் இறுதியிலும் சற்று முறுகல் நிலை தோற்றுவிக்கப் பட்டது.இன்று பிரச்சனை தோன்றப் போகிறது என்பதனை அப் பிரச்சாரத்தை பார்க்கும் போதே நான் யூகித்துக் கொண்டேன்.

அந்தளவு அவர்களின் பிரச்சாரம் அமைந்திருந்தது.இப் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மார்க்க அறிஞ்ஞர் பி.ஜே அவர்களை மிகவும் குறி வைத்து தாக்கி இருந்தார்கள்.எந்தளவு என்றால் பி.ஜே அவர்களை 'அண்ணன் பி.ஜே'என்றே விழித்தார்கள்.எமது பகுதிகளில் அண்ணன் எனும் வார்த்தை தமிழ் மதத்தினரையே குறிக்க பயன்படும்.இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமை பார்த்து காபிர் எனக் கூற யாருக்கும் அனுமதி இல்லை.அவ்வாறு கூறினால் யார் காபிர் நிலை அடைவார் என்பது யாவரும் அறிந்ததே!


இவர்கள் இஸ்லாத்தை போதிக்க வந்து எவ்வாறு வேளிப்படப்போகிறார்..??( அல்லாஹ் எம்மை இவ்வாறானவற்றை விட்டும் காப்பாற்றுவானாக)

இது போன்று தான் அக்கரைப்பற்றில் ளடவத இனரால் நடாத்தப் பட்ட பிரச்சாரத்தின் போது மௌலவி அன்சார் தப்லீகி அவர்கள் ளடவத இனரின் கருத்தால் தாக்கப் பட்டதாக அறிய முடிகிறது.10 நாள் விவாதக்கெடு தேவைதானா?

இப் பிரச்சனைகளுக்கு அடிப்படை எவ்வாறு இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற வழி முறை பிரச்சாரகர்கள் அறியாமையே எனலாம்!

ளடவத இனையோஇவவெத இனையோஇஅன்சார் தப்லீகி இனையோ விமர்சித்து இஸ்லாத்தை பரப்ப வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.எனவேஇபிரச்சாரகர்கள் பிரச்சாரங்களின் போது இவர்களின் பெயர்களை பயன்படுத்தி தாக்குவதை முதலில் நிறுத்த வேண்டும்.ஒருவரின் பிழையான கருத்து மக்களிடையே தாக்கம் செலுத்துகிறது என்றால் அக் கருத்தின் பிழையை மக்களிடம் நிரூபிக்கும் போது மிகவும் கன்னியமான முறையில் நிரூபிக்க விளைய வேண்டும்.கன்னியமான முறையில் எமது செயற்பாட்டை நாம் அமைத்தால் எமக்கு வருகின்ற விமர்சனமும் கன்னியமாகத்தான் வரப்போகிறது.

ஒருவர் கன்னியத்துடனும் இன்னுமொருவர் கன்னியம் தவறியும் நடப்பார்களாக இருந்தால்.கான்னியம் தவறுபவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.நாம் எதை கூற வந்தோமோ அச் செய்தி மக்களிடம் இலகுவாகவே சென்றடையும். வெலிகமையில் ஒரு இயக்கத்தினர் இன்னுமொரு இயக்கத்தினரை தாக்கி விட்டு தாங்கள் தாக்க வில்ல என மறைக்க எத்தனிப்பதே இதனை தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

மேலும்இஇலங்கையின் தற்போதைய நிலைமைகளில் இவைகள் உகந்தது தானா??என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.நாமே நமக்குள் அடித்துக் கொண்டு திரியும் நிலையில் தான்இநாம் இலங்கையில் உள்ளோமா??பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்காளால் அரங்கேற்றப்படும் இஸ்லாத்தை அழிக்கும் செயற்பாடுகளை விட இவ்வாறான இயக்க சண்டைகளே இஸ்லாத்தை மருகச் செய்கிறது என்பதை ஏன் நாம் அறியாமல் உள்ளோம்?நாமே நம்மை சதி வலைகளில் ஏன் விழச் செய்கிறோம்?

இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிக்கின்ற ஒரு மார்க்கம் என அன்னியவர்கள் நினைப்புக் கொண்டுள்ள இக் காலத்தில் அவற்றை 'இல்லை' என நிரூபணம் செய்ய வேண்டிய கடப்பாடு உள்ள நாமே இவ்வாறானவற்றை நாம் செய்து அவர்கள் நினைப்பிற்கு உரமிடலாமா??

அல்லாஹ் எம் அனைவருக்கும் சிந்தித்து செயல் படும் ஆற்றலை தருவானாக.யா அல்லாஹ்!உன் மார்க்கத்தில் எங்களை ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பாயாக.

ஆமீன் ஆமீன்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :