நெல்லின் உத்தரவாத விலையை அதிகரித்து தொடர்ந்தும் ரூபா 350 மானிய விலையில் உரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அம்பாறை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு வரவு –- செலவுத்திட்ட முன்மொழிவினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி 34 ரூபாவாகவிருந்த நெல் உத்தரவாத விலை யை 40 ரூபாவாக அதிகரித்து மானிய உரம் தொடர்ந்தும் 350 ரூபாவுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் மொத்தத் தேசிய நெல் உற்பத்தியில் 20 வீத பங்களிப்பை அம்பாறை மாவட்ட விவசாயிகள் நல்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அதிகமான பரப்பளவு காணியில் நெற்செய்கை பண்ணப்படுவதுடன் அதிகமான மக்களும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சலுகைகளின் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் நன்மையடையும் நிலையேற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியான நஷ்டத்தை எதிர்கொண்டு வந்த விவசாயிகள் உத்தரவாத நெல் விலை, மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானிய விலை உரச்சலுகை என்பனவற்றின் மூலம் இலாபமடைந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. உரத்திற்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்திலும் உரமா னியச் சலுகையை தொடர்ந்தும் விவசாயிகளுக்கு வழங்க முன்வந்ததையடுத்து நெற்செய்கையில் புதிதாக இணைந்து கொள்பவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது.
கடந்த சிறுபோகத்தின் போது நெல் விலை கணிசமானளவு அதிகரித்ததனால் விவசாயிகள் அதிக இலாபம் ஈட்டினர். தொடர்ந்தும் விவசாயிகள் அதிக இலாபம் ஈட்டத்தக்க வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கிய ஜனாதிபதிக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.
<வீர>
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment