மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கல்வி நிருவாக சேவை அதிகாரி அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்!

 பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையைச்  சேர்ந்த கல்வி நிருவாக சேவை அதிகாரி எஸ்.எம்.எம்.அமீர் அவர்களுக்கான  வரவேற்பும,; கடமைப்போறுப்பேற்பும் ஓய்வு பெறும் அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக்  தலைமையில் இன்று(31-10-02014) காலை நடைபெற்றது.

புதிய அதிபரை ஓய்வு பெறும் அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக், ஆசிரியர்கள,; அபிவிருத்தி  சபை உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், மற்றும் மாணவர்கள் மாலை  அணிவித்து பேன்ட் வாத்தியத்துடன் வரவேற்றனர். 

விஷேட விருந்தினர்களாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல்  நஜீம்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  ஏ.சீ.எம்.தௌபீக்,எம்.எச்.எம்.ஜாபீர்.கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி  ஹாதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில, பொரியிலாளர் ஏ.எம்.பஸீல் பாடசாலை அபிவிரத்திச் சங்கச் செயலாளர் நியாஸ் எம் அப்பாஸ் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். 

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 10வது புதிய அதிபராக மருதமுனை யைச் சேர்ந்த  கல்வி நிர்வாக சேவை அதிகாரி எஸ்.எம்.எம்.அமீர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று காலை காலை (31-10-2014) தனது கடமையைப்  போறுப்பேற்றுக் கொண்டார். அதிபராகக் கடமையாற்றிய ஏ.ஆர்.எம்.தவ்பீக் ஒய்வு  பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எஸ்.எம்.எம் அமீர் நியமிக்க்ட்டள்ளார். 

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மருதமுனை  ஷம்ஸ் மத்திய கல்லூரி; ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பேராதெனிய  பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாவார்.1984-12-27ம் திகதி ஆசிரியராக நியமனம்  பெற்று அணுராதபுரம,;;மருதமுனை ஆகிய கிராமப் பாடசாலைகளில் ஆசிரியராக் 
கடமையாற்றியுள்ளார்.


இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரிட்சையில் சித்தி பெற்று 2007-03-19ம்  திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்று கல்முனை,  மட்டக்களப்பு,சம்மாந்துறை,ஆகிய கல்வி வலயங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும்  கடமையாற்றியுள்ளார்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த சிவத்த மரைக்கார் ஹனிதா உம்மா தம்பதியின் புதல்வராவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :