பொதுபல சேனாவினால் சிங்களக் கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாகும்-ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பினரால் சிங்களக் கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஏற்கனவே தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் இருகின்ற நிலையில் பொதுபல சேனா அமைப்பினால் இக் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் தலைவர்களாக மாற, பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்த நாட்டின் தலைவர்களை, பொது பல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :