ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் இடதுசாரிக்கட்சிகள் வலியுறுத்தல்

திர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டாம் என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடது சாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சிக்கு இடதுசாரிக் கட்சிகள் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளன. மேலும் 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்றும் தேர்தல் முறைமையை மாற்றிமைப்பதுடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கும் செல்லவேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தடையாக உள்ளது. எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் விரைவாக அரசியல் தீர்வையும் காணலாம் என்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளன.

எனவே அரசாங்கம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தாலும் 2016 ஆம் ஆண்டு வரை அதனை பிற்போடுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது அவசரமாக நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே 2016 ஆம் ஆண்டு வரை தேர்தலை பிற்போடுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். அரசா்ஙகம் என்ன நிலைப்பாட்டில் இருந்தாலும் எமது முயற்சிகள் தொடரும்.

காரணம் இந்த நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகள் இன்னும் உள்ளன. தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றமையினால் அந்தப் பி்ரச்சினைகளை விரைவில் தீர்த்துவிடலாம் என்பதே எமது நிலைப்பாடாகும்.

குறிப்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும். இதனை தற்போதைய அரசாங்கத்தினாலேயே செய்ய முடியும். எனவே இந்தப் பிரச்சினையை தீர்க்கவேண்டியுள்ளது. அதேவேளை நாட்டின் தேர்தல் முறைமையை மாற்றிமைக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக தொகுதி முறைமை அல்லது கலப்பு தேர்தல் முறைமைக்கு செல்லவேண்டும்.

அத்துடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கும் செல்லவேண்டும். தற்போதைய நிலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தடையாகவுள்ளது. அதேவேளை 17 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட சில விடயங்கள் மீண்டும் கொண்டுவரப்படவேண்டும்.

இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும். இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே நாம் கூறுகின்ற விடயங்களை இந்த அரசா்ஙகத்தினாலேயே மேற்கொள்ள முடியும். எனினும் இதற்கு பின்னர் எந்த அரசா்ஙகத்துக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது. அதனால்தான் தற்போது ஜனாதிபதி தேர்தல் அவசியமில்லை என்று கூறுகின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :