2014ம் ஆண்டில் நடந்து முடிந்த பெறுபேறு வெளியிடப்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்பாராட்டினையும் தெரிவிப்பதுடன், இம் மாணவர்கள் சித்தியடையக் காரணமாகவிருந்த ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருக்கும்அவரது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அடுத்த ஆண்டுகளில் இதைவிடவும் அதிகமான மாணவர்கள் சித்தி பெற தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும்பிரதேச சபை முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் சித்தியடைந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில்ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
எம்.எஸ். அப்துல் வாஸீத்,
தவிசாளர்,
பிரதேச சபை,
பொத்துவில்.
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment