மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ரத்து


த.நவோஜ்-

ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பொதுச்சேவை ஐக்கிய தாதிமார் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் நலன்புரிச் சங்கத் தலைவருமான பி.புஸ்பராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தாதியர்களின் கடமை நேரக் குறைப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தொடர்பாக இந்த தாதியர் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று நடைபெறுவதற்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தாதியர்களின் கடமை நேரக் குறைப்பு சம்பந்தமாகவும், வைத்தியசாலையில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாதியர் பொதுச் சேவை ஐக்கிய தாதிமார் சங்கமும் அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கும் தாதியர் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கங்கள் எட்டப்பட்டதன் அடிப்படையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக புஷ்பராஜா மேலும் தெரிவித்தார்.

பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையினால் தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புஷ்பராஜா கூறினார்.

தாதிய உத்தியோகத்தர்களின் தினவரவுப் பதிவேடு மீண்டும் தாதிய தலைமைப் பரிபாலகியின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்படுதல், மேலதிக நேரக் கொடுப்பனவு கவனத்திற் கொள்ளப்படும், வைத்தியசாலையில் தாதியர் வாசிகசாலை ஒழுங்கு செய்து தரப்படும், தேவைக்கேற்ப தாதிய உத்தியோகத்தர்கள் தங்களது வார விடுமுறை மற்றும் விடுமுறை தினங்களில் கடமையில் ஈடுபட முடியும், ஓவ்வொரு நோயாளார் விடுதியிலும் இனிமேல் இரவுக் கடமைகளில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்களைக் கடமையில் நியமிக்க இணக்கம், அடுத்து வரும் கூட்டங்களில் தாதியர் பொதுச் சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் பிரதிநிதிகளும், அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றும் வாய்ப்பு, வெளியிடங்களிலிருந்து வந்து மட்டக்களப்பில் தங்கியிருந்து பணிபுரியும் ஆண் தாதிய உத்தியோகத்தர்களுக்காக விடுதியொன்றை ஏற்பாடு செய்து கொடுத்தல், உள்ளிட்ட விடயங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையிடமிருந்து தாம் எழுத்து மூலமான உத்தரவாதத்தைப் பெற்றுள்ளதாக பொதுச்சேவை ஐக்கிய தாதிமார் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் நலன்புரிச் சங்கத் தலைவருமான பி.புஸ்பராஜா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :