மனநோயர்கள் கூடுதலாக உள்ள நாடு இலங்கை :உலக மனநோயளர் தின நிகழ்வில்

 அஷ்ரப் ஏ சமத்-

லகில் உள்ள நாடுகளில் மனநோயர்கள் கூடுதலாக உள்ள ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது. ஒரு கிழமைக்குள்  400 திருமணங்கள் முறிவடைந்து செல்கின்றன. இதனால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வேறு சிந்தனைகள்  தாக்கங்கள், கோபம், வைராக்கியம், பொறாமை அடுத்தவரைப்பற்றி சிந்தித்தல், போதைவஸ்த்து, பாலியல்  வல்லுரவுகள் மற்றும் ஏற்றத் தாழ்வு ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசைகள். கடந்த கால 30 வருட கால  யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு சொந்தங்களை இழந்தோர்கள் போன்ற காரணங்களினால் இலங்கையில்  ஒரு நாளைக்கு 10 பேர் அளவில் மணநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கண்டவாறு மனநோய்  வைத்தியர் டொக்டர் நிரோஸன் மென்டிஸ் தெரிவித்தார்.

நேற்று உலக மனநோயளர் தினம் பொரளையில் உள்ள மனநோயாளர் ஜனசெவன நிலையத்தில் நடைபெற்ற  வைபவத்திலேயே மேற்கண்டவாறு டொக்டர் நிரோசன் தெரிவித்தார்.

இந் நோய்யினால் பாடசாலை மணாவ மாணவிகள் 450 பேர் கடந்த மாதம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு  சிகிச்சையளிக்கப்பட்டது.. இவர்கள் சிறுபராயத்தில் போதைப்பொருள் பாவணை, கஞ்சா மற்றும் வேறு  போதைகளை உட்கொண்டு இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர் தமது பாடசாலை பரீட்சை நெருங்கியதும்  பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் மனநோயாளர்களாக அடிக்கடி மனதத்துவ வைத்தியம் செய்து குணமடைகின்றனர். 

அத்துடன் அண்மையில் பருத்தித்துறை வைத்தியசாலைக்குச் சென்றிறுந்தேன் அங்கு 8500 மனநோயாளர்கள்  நாளாந்த மருந்து பெரும் கிளினிக்கில் பதிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்மையில் தெஹிவளையில் உள்ள ஒரு திருமண வீடியோ போட்டோ எடுக்கும் நிலையத்திற்குச் சென்றேன்.  அங்கு நூற்றுக்கணக்கில் திருமண போட்டோ அல்பங்கள் செய்து மாதக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை  ஏன் என்று அந் நிறுவன உரிமையாளாரிடம் கேட்டபோது. திருமண முடித்து ஒரு இரு மாதத்திற்குள் அல்பத்தை  கொடுப்பதற்கு சென்றால் அந்த திருமணம் முறிந்து பிரிந்துவிட்டார்கள். அவர்களது அல்பமே இவைகள். ஆகவே  தான் தற்பொழுது முழுப்பணத்தையும் செலுத்திணால் மட்டுமே வீடியோ போட்டோ எடுக்கப்படும் என நிபந்தனை  விதித்துள்ளதாக அந்த நிறுவனர் சொன்னார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :