ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு- படங்கள்





ஸிறாஜ் ஏ.மனீஹா-

ர்வதேச அசிரியர் தினத்தை முன்னிட்டு ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலய உயர்தரப்பிரிவு மாணவர்களினால் ஆசிரியர்களை கௌரவிக்கு முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய்(21)பாடசாலை அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக கோலகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.எம்.நபீல், தென்கிழக்குப் பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளரும் மீள் பார்வை பத்திரிகை ஆசிரியருமான என்.எம்.ஸிறாஜ் மஸூர் விசேட பேச்சாளராகவும், பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன், பிரதி அதிபர்களான ஏ.எல்.எம்.யாசீன், எம்.எல்.எம்.இஸ்மாயில், எஸ்.ஆதம்பாவா,பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் இஸட்.எம்.றகுமான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும். உயர்தரப் பிரிவு வலயத்தலைவர் அஷ்ஷெய்க் யூ.கே.றகீம் (நழீமி) சாதாரணதரப் பிரிவு வலயத்தலைவர் இஸட்.எம்.நிஸாமுடீன் உட்பட ஏனைய ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாகவும்.கலந்து கொண்டனர்.

இதன் போது ஆசிரியர்களுக்கான பலூன் உடைத்தல்,பனிஸ் சாப்பிடுதல்,ஊசி நூல் கோர்த்தல்,யோகட் சாப்பிடுதல்,சங்கீத கதிரை விளையாட்டு போன்ற பல்வேறு கலை கலாசார போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று அதில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மாணவர்களினால் பரிசுப் பொருட்கள் மற்றும் ஆசிரியர் தின நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :