முஸ்லிம்களாகிய நாம் எல்லா இன மக்களோடும் ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் வாழ வேண்டும்- எச்.றஹ்மான்

பி.எம்.எம்.ஏ.காதர்-

தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம்  மக்களும் நிம்மதியாகவும,; சந்தோசமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்  பிரார்த்தித்து பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் பெருநாளைக் கொண்டாட வேண்டும்  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணி உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான்; தனது பெருநாள் செய்தியில்  தெரிவித்தள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது :- பல்லின மக்கள் வாழும் இந்த  நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் எல்லா இன மக்களோடும் ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும்  பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும்.

இன்று உலகலாவிய ரீதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிரா அநீதிகளும், அநியாயங்களும்  கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் உலக முஸ்லிம் சமூகம் ஒற்றுமையுடன்  கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இப்றாஹீம் நபி (அலை) அவர்கள் உலகிற்கு காட்டித் தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லீம்  சமுகத்தின் விடிவுக்காக ஒவ்வொரு முஸ்லீமும் கடைப்பிடிக்க முன் வரவேண்டும். என அந்த பெருநாள்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :