ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இரண்டு தடவையல்ல ஐந்து தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருப்பதற்கு மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கின்றது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கந்தளாய் அல்தாரிக் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் கீழ் உள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப கூடத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;இன்றைய நாள் உங்கள் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக காணப்படுகின்றது. ஏனென்றால் ஒரு நாட்டின் தலைவரான ஜனாதிபதி உங்கள் கிராமத்திற்கு வந்து உங்களை சந்தித்து விட்டு செல்கின்ற நாளாகும்.
ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழுள்ள உங்களுடைய பாடசாலையும் மஹிந்தோதய தொழில்நுட்ப கூடத்தினை அமைத்து திறந்து வைப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலங்கை திருநாட்டிலே அதிகமானவர்கள் சிங்களவர்களே கல்வி அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால், சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் ஒரு தடவை பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்து இருக்கின்றார். அந்த கால கட்டத்தில் கல்வி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் தொழில்நுட்ப விடயங்கள் இன்னும் பின்னடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
ஆனால், கிராமப்புற பாடசாலைகளிலும் நகர் புற பாடசாலைகளிலும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

0 comments :
Post a Comment