கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் யுனிசப் நிறுவனத்துடைய
நிபுணர் அன் அண்டனி கொட்ஜட் அவர்களை சந்தித்து வழமையான யுனிசபின் உதவிகளை மீண்டும் உரிதிப்படுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைசின் கீழ் உள்ள சுகாதார, சமூக சேவைகள் மற்றும் நண்ணடத்தை சிறுவர் பராமரிப்பு ஆகிய மூன்று திணைக்களங்களுக்கும் மிக நீண்ட காலமாக பண ஒதுக்கீடுகளை செய்து உதவி வந்த யுனிசப் நிருவனம் தனது உதவிகளை மட்டுப்படுத்த தீர்மாணித்துள்ளது.
இலங்கை ஒரு நடுத்தர வருமானமுடைய நாடு என தன்னை அன்மையில் பிரகரனபடுத்தியதையடுத்து இந்த தீர்மாணத்தை யுனிசப் எடுத்துள்ளதாக தெரியவருகிறது,
இதனையடுத்து அமைச்சர் மன்சூர் அவர்கள் யுனிசபுடைய தலைமை அலுவலகத்தோடு தொடர்பு ஏற்படுதியதை தொடர்ந்து இந்த சந்திப்பு கிழக்கு மாகண சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது யுனிசபுடைய உதவி தொடர்ந்தும் தேவை என்பதற்கான நியாயங்களை அமைச்சர் முன்வைத்துள்ளார்.
இலங்கை மத்திய அரசு பல்வேறு உதவிகளை தேவைகளையும் இத்திணைக்கலத்தினூடாக கிழக்கு மாகாண மக்களுக்கு ஆற்றிவருகின்ற போதும் யுனிசபுடைய உதவி உடனடியாக நிறுத்தப்படுவது அல்லது மட்டுப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்ககூடிய விடையம் அல்ல எனபதை யுனிசபுடைய நிபுணரிடம் உள்வாங்கியுள்ளதாகவும் வழமையான உதவிகளுக்கும் அப்பால் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் காணப்படும் அதாவது 59,000 க்கும் மேற்பட்ட விதவைகளுகளுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளதாகவும் இந்த சந்திப்பு தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மன்சூர் அவர்கள் எமது இம்போட் மிரர் செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment