சட்டத்துறை வாழ்வில் பொன்விழா காணும் சமூக சேவையாளர் க.மு. தர்மராஜாவுக்கு கௌரவிப்பு நிகழ்வு!

ட்டத்துறை வாழ்வில் பொன்விழா காணும் சமூக சேவையாளர் க.மு. தர்மராஜாவுக்கு கௌரவிப்பு நிகழ்வும் மலர் வெளியீடும் எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரா தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி கனக். ஈஸ்வரன் மற்றும் கௌரவ அதிதியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர்) ஆகியோர் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரைகளை பேராசிரியர் சோ. சந்திரசேகரம், ஆ. இரகுபதி பாலசிறிதரன் (தலைவர் கொழும்பு தமிழ்ச் சங்கம்) வீ. தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர் தினக்குரல்) ஆகியோர் வழங்குவதுடன் சிறப்புரையை 'சூரசங்காரம் = தர்மம் வெல்லும்' எனும் தலைப்பில் தமிழ் மாமணி தமிழருவி த. சிவகுமாரன் நிகழ்த்துவார். நன்றியுரையை ஊடகவியலாளர் அ. நிக்சன் நிகழ்த்துவார். இந்த விழாவை தர்மராஜாவின் ஊடக நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :