கல்முனை ஸாகிறாவின் கிரிகட் சம்பியன்களை பாராட்டுவதில் மகாசபை பெருமிதம்

எம்.எம்.ஏ.ஸமட-

ல்முனை ஸாகிறாவின் கிரிகட் சம்பியன்களை பாராட்டுவதில் மகாசபை பெருமிதம் கொள்வதாக ஸாகிறா கல்லூரி மகா சபையின் செயலாளர் டாக்டர் வை.எல். யூசுப் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிகெட் குழுவுக்கிடையிலான தேசிய மட்டச் சுற்றுப்போட்டில் சம்பியனாகத் தெரிவு செய்யபட்ட ஸாகிறா கல்லூரி மாணவர்களின் சாதனை குறித்த பெருமிதத்தை அவர் மேற்கண்டவாறு வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமையின் முட்டையிடலுக்கு ஒப்பான கல்முனை ஷாஹிறாக் கல்லூரியின் சாதனைப் படைப்புகள் அண்மைக்காலமாக சற்று உறங்கு நிலையை அடைந்திருந்த போதிலும் சாதனைகள் ஒருபோதும் மரணிப்பதில்லை எனும் உண்மையை ஒப்புவிக்கும் விதத்தில் 17 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களின் அகில இலங்கை ரீதியிலான கடின பந்து கிரிகட் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சம்மியன் பட்டத்தைப் பெற்றுள்ளமை பாடசாலைக்கு பெருமை சேர்ப்பது மட்டுமன்றி பாடசாலையின் சாதனைகள் மீண்டும் ஆரோகணப்பாதையில் அதிபர் பீ.எம்.எம். பதுறுத்தீன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பெருமை சேர்த்த சாதனையாளர்களான மாணவர்களையும் அவர்களுக்கு முதுகெலும்பாயிருந்த ஆசிரியர் ஏ. பைசர் அவர்களையும் அதிபர் பீ.எம்.எம். பதுறுத்தீன் அவர்களையும் மற்றும் ஏனைய ஒத்தாசை வழங்கிய ஆசிரியர்களையும் ;மாணவர்களையும் ஊழியர்களையும் மனமார மகாசபை பாராட்டுவதோடு பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மகாசபை வழங்கும் என்றும் அதன் செயலாளர் டாக்டர் வை. எல். எம் யூசுப் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்ற மாணவர்களை இன உணர்வுகளுக்கு அப்பால் தேசிய கிரிகட்குழாமில் சேர்த்து எதிர்கால தேசிய வீரர்களாக மாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் சகல தரப்பினரும் குறிப்பாக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :