எம்.எம்.ஏ.ஸமட்-
இம்மாதம் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு உளவளத்துணை ஒன்றியம் நடாத்தும் 2014ஆம் ஆண்டுக்கான சர்வதேச உளநல தின நிகழ்வு நாளை (04.10.2014) சனிக்கிழமை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எஸ். ஸ்ரீரதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
உளநோய்களோடு வெற்றிகரமாக வாழுதல் எனும் கருப்பொருளுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். சாள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட மனநல வைத்திய நிபுணர் டாக்டர் ரி. கடம்பநாதன், தேசிய மன நல நிறுவகத்தின் வைத்திய நிபுணர் டாக்டர் எம். கணேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள்; உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு உளவளத்துணை ஒன்றியத்தினர் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment