ஸிறாஜ் ஏ.மனீஹா-
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில்; அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள்,விவசாயிகள்,சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு காட்டு யானைகளின் அச்சம் காரணமாக சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து செல்லக் கூடிய சூழ் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மேற்படி கிராமத்திற்கு இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் அங்குள்ள தென்னை.பாலா.மா. வாழை மரங்கள்.மற்றும் வீட்டுத்தோட்டப் பயிர்கள் போன்றவற்றை துவம்சம் செய்து நாசப்பபடத்தி வருவதுடன் வீடுகளையும் சேதப்படத்தி உயிராபத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
மாலை 04மணி ஆனதும் ஹிறா நகர் கிராமத்திற்கு அருகாமையிலுள்ள முள்ளிக்குளத்து மலையை அண்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள்ளிருந்து வரும் காட்டு யானைகள் கிராமத்தின் பிரதான பாதைகளினூடாக நடமாடுவதனால் யானையின் பீதியின் காரணமாக அங்குள்ள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அண்மைக்கிராமத்திலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ள பரிதாப நிலைக்கு தள்ளப்படடுள்ளனர்.
.jpg)
இதேவேளை காட்டுயானைகள் இன்று வெள்ளிக்கிழமை(03) அதிகாலைவேளையில் அக்கிராமத்திலுள்ள தேனீர் கடை ஒன்றை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் கடையிலுள்ள பொருட்களையும் அளித்து நாசப்படுத்தி சென்றுள்ளது.
கடந்த பயங்கரவாத சூழ்நிலையின் போது இக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை கிழக்கு மாகாண சபையின் ஊடாக மகிந்த சிந்தனை திட்டத்தின் வலுவிளந்த கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தற்போதய கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசண வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் வேண்டுகோளின் பேரிலும் அயராத முயற்சியின் பயனாகவும் மீண்டும் இக்கிராம மக்கள் மீள் குடி அமர்த்தப்பட்டனர்.
மீள் குடியமர்த்தப்பட்ட இக்கிராமத்தின் மிகவும் அத்தியவசிய தேவையாக விளங்குகின்ற மின்சார மற்றும் குடி நீர் இணைப்பினை வழங்குவதுடன் காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து இக்கிராமத்தையும் அங்குள்ள மக்களையும் அவர்களது சொத்துக்கள் மற்றும் உடமைகளையும் பாதுகாக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென அங்குள்ள மக்கள் கோரிக்கை விதுக்கின்றனர்.
.jpg)
0 comments :
Post a Comment