பதுளை மண்சரிவு அனர்த்தம்: இந்தியா உதவி,அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபம்

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது. 

இந்த மண்சரிவு குறித்து இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், 

கொஸ்லாந்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

தமது அன்புக்குரியவர்களை இழந்தும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தும் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பெரும் இழப்புக்களை, சேதங்களை அடையாளம் கண்டும் வரும் நிலையில் அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். 

இலங்கை அரசாங்கத்தினதும் அதன் படையினரினதும் துரிதமான பிரதிபலிப்புகள் மற்றும் துணிவுடனான தேடுதல் மீட்புப் பணிகளை நாம் பாராட்டுகிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்லாந்தை - மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. 

மண்சரிவு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும் விடுத்துள்ளார். 

இந்தியாவின் உதவி அறிவிப்புக்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் இன்று பெரும்பாலும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்வர் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :