த.நவோஜ்-
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வுகள் வைத்தியசாலையில் இடம் பெற்றன.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எஸ்.தட்சனாமூர்த்தி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன, குழந்தை நல வைத்திய நிபுனர் வீ.பிரோமினி மற்றும் வைத்திய அதிகாரிகளும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment