கிழக்கின் எழுச்சி -2014 கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரப் புரட்சிக்கான கண்காட்சி





எம்.வை.அமீர். பைஷல் இஸ்மாயில்-

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சின் செயற்திட்டங்களில் ஒன்றாக ஏற்பாடு செய்து நடத்தப்படும் வருடாந்த மறுமலர்ச்சிக் கண்காட்சியின் 2014ம் வருடத்துக்கான நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகாவித்தியாலயத்தில் 09-10-2014 காலை கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களால் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நசீர் அஹமட் அவர்களது தலைமையில் இடம்பெறும் இக்கண்காட்சியும் விற்பனைக்கூடமும் 09-10-2014 முதல் 11-10-2014 வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகரசபை முதல்வர் நிஸாம் காரியப்பர் போன்றோருடன் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் எம்.ஏ.அப்துல் மஜீத் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பெரும்திரளான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :