வெள்ளவத்தை மயூரா பிளேசில் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.



அஷ்ரப் ஏ சமத்-

வெள்ளவத்தை மயூரா பிளேசில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ் வீடமைப்புத்திட்டத்திற்கு 800 மில்லியன் ருபா செலவில் குறைந்த வருமானம் பெரும் 118 முவினத்தையும் சேர்ந்த நடுத்தர வருமாணம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச ஆலோசனையின் பேரில் இவ் வீடமைப்புத்திட்டம் நிர்மாணிகக்ப்பட்டது. 

ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி கொண்டது. வீட்டின் பெறுமதி 80 இலட்சம் ருபாவாகும் ஏற்கனவே இக் காணியில் வாழ்ந்தவர்களுக்கும் இத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டன. 

இந் நிகழ்வில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன,ஜீவன் குமாரதுங்க பாராளுமன்றஉறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :