கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரால் சுடர் ஒளிப்பத்திரிகையின் துணைப்பத்திரிகையான முஸ்லிம் முரசு வாராந்த வெளியீட்டுக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கு அமைச்சர் மன்சூருக்கு சாதகமாக சூழ்நிலை அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மன்சூரின் பெயரில் முற்றிலும் பொய்யான அபாண்டமாகக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் முரசின் வாரவெளியீடான 2013.05.15 பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிராக 500 மில்லியன் மானநஷ்ட ஈடுகோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று 07.10.2014 கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிராளிகள் தொடர்ச்சியாக மன்றுக்கு சமூகமளிக்காமையினால் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கி கொழும்பு மாவட்ட நீதிபதி எதிராளிகளுக்கு இம்மாதம் 28ஆம் திகதி ஆஜராகும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மன்சூருக்கு எதிராக வெளிவந்த அறிக்கையில் எந்த வித உண்மைகளும் இல்லாமையால் பத்திரிகை சம்மந்தப்பட்டவர்கள் தடுமாறிக்கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்ட முஸ்லிம் முரசு பத்திரிகையை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வழக்கில் அமைச்சர் மன்சூருக்கு முற்றிலும் சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு அமையும் என்று அமைச்சரின் சட்டத்தரணி றிஜாப் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment