அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையின் ஹெபிடாடட்டின் பிரதான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாத முதற் திங்கற் கிழமையை உலக குடியிருப்பு தினமாக ஜக்கிய நாடுகள் சபையின் உலக குடியிருப்பு அமையம் பிரகடனப்படுத்தி உலகம் முழுவதிலும் இத் தினத்தை கொண்டாடுகின்றது. உலக குடியிருப்பு தினத்திற்காக விஷேட தொனிப்பொருளொன்றைப் பிரகடனப்படுத்தி உலகின் பிரதான நகரமொன்றை மத்திய நிலையமாகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் இத்தினத்தினத்தினை கொண்டாடி வருகின்றது. அந்த வகையில் இவ் ஆண்டினை 'சேரி வாழ் மக்களின் குரல்' என்ற தொணியில் உலகில் பல்வேறு நிகழ்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இலங்கையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு 'ஜனசெவனவின் குரல்' என்ற தொணிப்பொருளில் நாடளாரீதியில் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த மாதத்தினை உலக குடியிருப்பு பற்றிய அமைச்சின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி அந்த நிகழ்வுகள் ஊடாக உலக குடியிருப்பின் தொனிப்பொருளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விழிப்பூட்டி வருகின்றது. இலங்கையின் ஹெபிடாடட்டின் பிரதான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஒழுங்கு படுத்தியுள்ளார்.
ஜக்கியநாடுகள் சபையின் ஹெபிடாட் உலகில் உள்ள மக்களது குடியிருப்பு விடயத்தில் கவனஞ் செலுத்தி வருகின்றது. மனிதன் வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற வீடுகளில் வாழுகின்ற மக்களின் வீட்டுத் தேவையையும், அதனோடு தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்கானதொரு சந்தர்ப்பத்தை வழங்குவதே இந்த உலக குடியிருப்பு தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.
1985ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்து வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த ஆர். பிரேமதாசாவினாலேயே உலக குடியிருப்பு அமைப்பை ஏற்படுத்துமாறு ஜ.நாவில் இலங்கை சார்பாhக பிரகடணப்படுத்தினார்.
அவை உறுப்புரிமை நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1986ஆம் ஆண்டில் இருந்து ஹெபிடாட் அமைப்பு உலகில் உள்ள 197 நாடுகளிலும்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாண்டின் தொனிப்பொருளான சேரி வாழ் மக்களின் குரல் - சமுக வலையமைப்புக்கள், வெப்தளங்கள், சிறுவர்களை ஓவியம் மற்றும் பேச்சு கட்டுரைப்போட்டிகள், புகைப்படக் கண்காட்சி, தொலைத்தொடர்பு ஊடகம், பத்திரிகை வானொலி ஊடாக விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஹெபிடாட் நிறுவனம் தத்தமது நாடுகளில் அமுல்படுத்தி வருகின்றது.
உலகில் நகரமயமாக்குவதில் கவனஞ் செலுத்தி வரும் இக்கால கட்டத்தில்
நகர்ப்புறங்களில் சேரி குடியிருப்பு மக்களுக்காக இவ்வருட உலக குடியிப்பு
தினத்தினை ஒதுக்கி நகரங்கள் எதிர்பார்ப்புக்களின் ஈந்து அம் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் வேண்டும். ஜக்கிய நாடுகள் சபையின்
புள்ளிவிபரங்களின்படி இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வருகின்ற அநேகமான நாடுகளில் இன்று உலக மக்கள் தொகையில் நான்கிலொரு பகுதியினரே நிலையான சொந்த வீடுகளில் வாழ்கின்றனர். ஏனையோர் வாடகை வீடுகளிலும் குடிசைகளிலும், சேரி, பஸ் நிலையம் புகையிரத நிலையங்களிலும், கடலோரங்களிலும், லயன் அறைகளிலும் தற்காலிக கூடாராங்களிலும் வாழ்ந்து வருகின்றனனர்.
ஜக்கிய நாடுகள் உலக குடியிருப்பு அமையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் வறுமை, போதியளவு வீடுகள் இல்லாமை, உலகில் பூகோல ரீதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்கள் உட்பட சுற்றாடல் பிரச்சினைகளாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தற்பொழுது கொழும்பு நகரத்தில் 52 வீதமான மக்கள் வீட்டுரிமையற்றவர்களாக வாழ்கின்றனர். 2020ஆம் ஆண்டாகும்போது உலகின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கு மேற்பட்டோர் நகரங்களிலேயே வாழ்வார்களென எதிர்பார்க்கப்டுகின்றது. இலங்கையில் இந்த தொகை 2030ஆம் ஆண்டாகும்போது 65வீதமாக அதிகரிக்க இடமுண்டு.
இலங்கையில் 50 இலட்சம் மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்ட 10 நகரங்களில் 8 கொழும்பை தலைநகரமாகக் கொண்ட மேல் காணத்திலேயே உள்ளன. மேலும் பகல் நேரங்களில் கொழும்பு மாநகரத்தில் வதிபவர்கள் 11 இலட்சம் என நகர அதிகார சபை கணக்கிட்டுள்ளது. கொழும்பில் வீடில்லாமால் சேரி வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களுக்கு 66 ஆயிரம் வீடுகள் அவசரமாக நிர்மாணித்துக் கொடுக்க வேண்டியுள்ளது. கொழும்பை அழகுபடுத்தல் திட்டத்தின் கீழும் மேலும் 10ஆயிரம் வீடுகள் அப்புறப்படுத்தி அம் மக்களுக்கு தொடர்மாடி வீடமைத்து நிர்மாணிக்க வேண்டியுள்ளது. ஆனால் இலங்கை சமாதானம் மலர்ந்த பின் கொழும்பில் சகல பிரதேசங்களிலும் தனியார் வீடமைப்பு நிர்மாணிக்கும் கம்பணிகள் கடந்த 3 வருடத்தில் மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் சுகபோக வர்க்கத்தினருக்காக ஜரோப்பிய முறையிலான தொடர்மாடி வீடுகள் நிர்மாணித்துள்ளன. இக் கம்பணிகள் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்துள்ளன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் 1 கோடி முதல் 5 கோடி வரை பெறுமதிக்கு விற்கப்படுகின்றன. இந்த வீடமைப்புத் திட்டத்தினால் குறைந்த
வருமாணம் பெரும் குடும்பங்களுக்கு ஏற்புடையதல்ல.
மேல் மாகாணத்தில் நகரங்களில் வாழும் மக்கள் சமுக அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளைப் பெற பல இன்னல்களை எதிர்நோகக வேண்டியுள்ளது. இம் மக்கள் தமக்குத் தேவையான உடை,உணவு, வீட்டு வசதிகளையும் மற்றும் பொதுவசதிகளான நீர் வழங்கல், வடிகாலமைப்பு, போன்றவற்றினைப் பெற மிகவும் முயலவேண்டியுள்ளது.
பொருளாதாரத்தினை ஆதாரமாகக் கொண்டுள்ள வர்த்தக கைத்தொழில் வளர்ச்சியுடன் நகரங்களும் வளர்ச்சி பெறுகின்றன. தற்சமயம் குற்றச் செயல்கள் போதைப்பொருள் பாவணை போன்ற தாக்கங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளன. நகர் வாழ் மக்கள் ஆண், பெண், குழந்தைகள், முதியோர்கள், பணம்படைத்தவர்கள், வறியவர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி இத் தாக்குதல் வன்முறைகளுக்குப் பயந்து வாழ வேண்டியுள்ளது.
கொழும்பில் களனி பாலத்தை அண்டிய பிரதேசம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டக்கொட, சிலேவ் ஜலன்ட், கிருலப்பனை, நாரேஹேன்பிட்டிய, கொலன்நாவ, மட்க்குழிய கிராண்பாஸ், புறக்கோட்டை, பம்பலப்பிட்டி தொட்டு பாணந்துரை வரை கடலோர பிரதேசங்களில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மனித குடியிருப்புக்கு பொருத்தமற்ற வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 10 இலட்சம்
வீடமைக்கும் திட்டத்தில் கொழும்பில் தொடர்மாடி வீடுகளும், வீடற்ற குடும்பங்களுக்கு 2 பேர்ச் காணியும் 50ஆயிரம் ருபா வீட்டுக்கடனும் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ் வீடமைப்புத்திட்ங்கள் ; 25 வருடத்தை கடந்துவிட்டது. இவ் வீடுகளில் வாழ்ந்த குடும்பங்கள் மும்மடங்காக பெறுகியுள்ளன.
சனநெரிசல்கள் அதிகரிக்க அதிகரிக்க அப்பிரதேசம் ஒரு சேரி மற்றும் குற்றச் செயல் பெருகி சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற பிரதேசமாகவும் சூழல் சுற்றாடல் சத்தம் கூச்சல்கள் சட்ட விரோத கொட்டில்கள் பெருகி சேரி வீடுகளாகவே இப்பிரதேசங்கள் தற்பொழுது காட்சியளிக்கின்றன.
தொழில் நிமித்தமும் கடந்த 30 வருடகால யுத்தத்தினாலும் கொழும்பில வந்து குடியேறிய மக்கள் தொகை பெருகியுள்ளன. கொழும்பில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வாழ்ந்த மக்களில் 40 வீதமானோர் இன்னும் வாடகை வீடுகளிலும் சேரிகளிலுமே இன்று வரைக்கும் வாழ்ந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் தமிழ் முஸ்லீம் மக்களே பெரும்பாண்மையாக உள்ளனர்.
வட கிழக்கில் கடந்த 3 தசாப்தகால யுத்தத்தினாலும் இயற்கை அணர்ந்தங்களினாலும் வீடுகளை இழந்த மக்களுக்காக ஒரு இலட்சத்து 50ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்க வேண்டியுள்ளது. அத்துடன் மலையக பகுதிகளில் வாழும் மக்கள் இதுவரை லயண் அரைகளிலேயே கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் இம்மக்களுக்காகவும் 2 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க வேண்டியுள்ளது.
இவர்களுக்;கான முறையான வீடமைப்புத்திட்டமொன்றை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும் பல தொடர்மாடி வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதில் 100 வீடமைப்புத்திட்டங்கள் மனித வாழ்க்கைக்கு பொருத்தமற்ற வீடுகளாக காணப்படுகின்றன. கொழும்பில் பாரிய அளிவில் அரச காணியின்மையால் இம் மக்களை கொழும்பை அண்டிய பிரதேசங்களான கம்பஹா மற்றும் அவிசாவலை, கொலநாவ வெள்ளம்பிட்டிய மொரட்டுவை பிரதேசங்களிலேயே தொடர்மாடி வீடுகளை அமைத்து குடியேற்றுவதற்கு திட்டம் வகுத்துள்ளனர்.
அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறும் உலக குடியிருப்பு தினத்தினை முன்ணிட்டு அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசனையின் பேரில் பின்வரும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2 வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகள் உலக குடியிருப்புக்கு ஏதுவான பல வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. கடந்த வாரம் கொழும்பு மாநகரில் வாழும் 5ஆயிரம் சிறுவர்களை அழைத்து கொழும்பு விகாரமாகதேவி பார்க்கில் சிறந்த சுத்தமான நகரம் மணித வாழ்வுக்கு பொருத்தமான குடியிருப்பு
பற்றிய ஓவியக் கண்காட்சிகளை நடாத்தினார்கள்.
சிறுவர் தினத்தில் தெரிபு செய்த 600 ஓவியங்களை கலாபவணத்தில் கண்காட்சிக்கு வைக்;கப்பட்டுள்ளது. இதே தினத்தில் குறைந்த வருமாணம் பெறும் குடும்பங்களுக்கு விகாரமாகதேவி பார்க்கில் அவர்களது உணவு உற்பத்திகளை பண்டங்களை விற்பணை செய்வதற்காக 3 நாற்களுக்கு கூடம் அமைத்து அதற்குரிய கேஸ் அடுப்பு கேஸ் சிலின்டர் உபகரணங்களை இலவசமாக வழங்கியுள்ளது. அத்துடன் மரவேலை, மேசன், குழாய் பொருத்துணர், வேக்கோ இயந்திர இயக்குணர் போன்ற துறைகளில் 100 நிர்மாணத் தொழிலாளர்களுக்கு என்.வி.கியு சான்றிதழ் வழங்கி அவர்களை இக்டாட் நிறுவனத்தில் பதிவுசெய்துள்ளது. அத்துடன் இவர்களை அரச தனியார் நிர்மாணப்பணிகளை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்குரிய அவர்களது துறைசார்ந்த பயிற்சிகளையும் அளித்துள்ளது.
அத்துடன் 1200 வீடுகளை மீள புனர் நிர்மாணம்செய்து மக்களிடம் கையளித்துள்ளது. மாணவர்களது வீதி நாடகம், கட்டுரைப் போட்டி ஓவியம் வரைதல் விளையாட்டுப்போட்டிகள் போன்ற பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி உலக குடியிருப்பு தினத்தினை மாணவ சமுகத்திற்கு உணர்த்தியுள்ளது. திறமையை வெளிக்காட்டிய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உலக குடியிருப்பு தினத்தில் ஜனாதிபதியினால் விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்படுகின்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளில் வாழும் 500
குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த நாட்டின் ஒரு நிலையான தேசிய வீடமைப்புக் கொள்கை ஒன்றை வரைந்து அமைச்சரவையில் அங்கீகரித்து 50 அமைச்சுக்களின் அங்கிகரித்து இத் தினத்தில் வெளியீட்டு வைக்கப்பட உள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment